தென்காசி:தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வருகை தந்தார். இதில் ஆயிரப்பேரி கிராமத்தில் காங்கிரஸ் கிராம கமிட்டி நடைபெற்ற நிலையில் அங்கு நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை கூறுகையில்,"கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செல்வப் பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu) இதனை முழுமையாகக் காங்கிரஸ் வரவேற்கிறது. அதே நேரம் சிபிசிஐடி போலீசாரும் இந்த வழக்கில் பலரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்றார். தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அனைவரும் விருப்பப்படுகின்றனர்.
இதையும் படிங்க:'விஜயை நாங்கள் வரவேற்றோம்'.. 'திருமாவளவனுக்கு அழுத்தம்' ஏற்பட்டிருக்கு - செல்லூர் ராஜு பேச்சு
அந்த வகையில் தற்போது இந்தியா கூட்டணி ஒற்றுமையுடனும் வலிமையாக உள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். நடிகை கஸ்தூரி சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் ஆதாரங்கள் முறையாகவும் இருந்த காரணத்தினால் அவர் மீது உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் நெல்லை காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜெயக்குமார் படுகொலை செய்த வழக்கில் அப்படி அல்ல. இதுவரை யார் அந்த கொலையைச் செய்தார்கள் என்பது மர்மமாக உள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போதும் யார் கொலை செய்தார் என்பது குறித்தான எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை.
இது குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு எப்படி போலீசாருக்கு சாவம் மிக்கதா உள்ளதோ, அதே போல் தான் ஜெயக்குமார் கொலை வழக்கும் உள்ளது. விரைவில் உண்மையான குற்றவாளி கைது செய்யப்படுவார் என நம்புகிறோம். ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விவகாரம் கண்டிக்கத்தக்கது. மேலும் இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளோம்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்