ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆவின் பாலகத்திற்கு சித்தோடு ஆவின் பாலக தலைமை அலுவகத்திலிருந்து விற்பனைக்காக வேனில் பிஸ்கெட்கள் கொண்டு வரப்பட்டடன. வேனில் விற்பனைக்காக கொண்டு வரும் பிஸ்கட்டுகள் காலாவதியானது என கோபி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் கோபி பேருந்து நிலையம் அருகே காத்திருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி குழந்தைவேலு, அந்த வழியாக வந்த ஆவின் பாலக வேனை நிறுத்தி ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வில், வேனில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பிஸ்கட்டுகள் காலாவதியானது என தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து காலாவதியான பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்து, ஈரோடு உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததாக கோபி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி குழந்தைவேலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொடிவேரி பாசன விவசாய சங்கத் தலைவர் சுபி தளபதி கூறுகையில், "ஈரோடு மாவட்ட ஆவின் நிர்வாகம் தொடர்ந்து ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்ததாகவும், சித்தோடு ஆவின் பாலகத்தில் உற்பத்தி செய்யப்படுகிற பிஸ்கட்டுகள் காலாவதி தேதி முடிந்த பிறகும் ஆவின் பாலகத்திற்கு முறைகேடாக பில் போடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.