சென்னை: இலங்கை போரில் மரணமடைந்தவர்களுக்காக மாவீரர் நாள் என்ற நிகழ்வை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் முன்னெடுத்து வந்தனர். 2009ல் இறுதிக்கட்ட போருக்குப் பின்னரும் இந்த மாவீரர் நாள் தமிழ் ஆர்வலர்களாலும், தமிழ் தேசிய சிந்தனையாளர்களாலும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் மாவீரர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
விஜயின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் "மாவீரம் போற்றுதும், மாவீரம் போற்றுதும்" என்ற வரிகள் பதிவிடப்பட்டுள்ளன.
மாவீரம் போற்றுதும்
— TVK Vijay (@tvkvijayhq) November 27, 2024
மாவீரம் போற்றுதும்