தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் கொடியேற்ற விழாவில் இசைக்கேற்ப நடனமாடிய யானை! - Sri Gnanapureeswarar Temple - SRI GNANAPUREESWARAR TEMPLE

Dharmapuram Sri Gnanapureeswarar Temple: ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில், சிறப்பு பூஜைகள் செய்தபோது தருமபுரம் ஆதீன வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளம் மற்றும் மேளதாள வாத்தியங்களுக்கும் ஏற்றவாறு யானை தன் தலையை ஆட்டி நடனமாடியது.

தருமபுரம் ஆதீனம் மற்றும் யானையின் புகைப்படம்
தருமபுரம் ஆதீனம் மற்றும் யானையின் புகைப்படம் (credits -ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 10:30 PM IST

மேளதாளங்களுக்கு ஏற்ப நடனமாடும் யானையின் வீடியோ (credits -ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் உள்ளது. இங்கு ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் பெருவிழா, குருபூஜை விழா மற்றும் ஆதீன கர்த்தரின் பட்டணப்பிரவேசவிழா நடைபெற உள்ளதையொட்டி இன்று காலை ஶ்ரீஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்ற விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவிற்காக வனத்துறையிடம் 15 நாட்கள் அனுமதி பெற்று, 34 வயதுடைய லக்கிமணி என்ற பெண் யானை வரவழைக்கப்பட்டது. இந்த யானையை தருமபுர ஆதீனம் தானமாக பெற உள்ளார். இதற்காக, கருங்கல் தளம் மற்றும் மண்தளம் அமைக்கப்பட்டு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் யானை கொட்டகை கட்டப்பட்டு திறப்புவிழாவும் இன்று நடைபெற்றது.

தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து பழங்கள், காய்கறிகள், குளிர்ச்சிதரும் தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார். இதனைத்தொடர்ந்து யானையுடன் நின்று தருமபுர ஆதீனம் மற்றும் பக்தர்கள் ஆசி பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக, ஶ்ரீஞானபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில், சிறப்பு பூஜைகள் செய்தபோது தருமபுரம் ஆதீன வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளம், மந்திரங்களுக்கும், மேளதாள வாத்தியங்களுக்கும் ஏற்றவாறு யானை தன் தலையை ஆட்டி நடனமாடியது தருமபுர ஆதீனத்தையும் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்க:விராலிமலை பட்டாசு குடோன் தீ விபத்தில் ஒருவர் பலி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! - Pudukkottai Fire Accident

ABOUT THE AUTHOR

...view details