சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் வேட்பாளர்கள் மற்றும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நெருங்கும் வேட்பாளர்கள் குறித்த விவரங்களை இங்கு காண்போம்.
18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. அன்றைய தினம் மாலையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) நடைபெற்று வருகிறது. இரவு 7.30 மணி நிலவரப்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கும் வேட்பாளர்கள் விவரம்:
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதி:காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 796956 வாக்குகள் பெற்று 572155 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 223904 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் 667391 வாக்குகள் பெற்று 4,41,899 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக கட்சி வேட்பாளர் முஹம்மது முபாரக் 225492 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி:திமுக வேட்பாளர் கனிமொழி 5,02,468 வாக்குகள் பெற்று 3,65,224 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,37,244 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி:தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு 515911 வாக்குகள் பெற்று 3,35,980 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரமோகன் 179931.வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி: திமுக வேட்பாளர் முரசொலி 4,79,979 வாக்குகள் பெற்று 3,04,427 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தேமுதிக வேட்பாளர் சிவனேசன் 1,75,552 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி:மதிமுக வேட்பாளர் துரை வைகோ 4,30,214 வாக்குகள் பெற்று 2,53,144 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் கருப்பையா 1,77,070 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி:காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 295141 வாக்குகள் பெற்று 138864 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் 156277 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.