தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1,045 வாக்குகளில் 10 வாக்கு மட்டுமே பதிவு.. தென்காசி கே.கரிசல்குளம் கிராமத்தினரின் புறக்கணிப்புக்கு காரணம் என்ன? - Election boycott basic facilities - ELECTION BOYCOTT BASIC FACILITIES

Election boycott due to lack of basic facilities: சங்கரன்கோவில் அருகே கே.கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததாக, மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணித்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

election-boycott-due-to-lack-of-basic-facilities-in-karisalkulam-village
கே.கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தராததால் தேர்தல் புறக்கணிப்பு: வெறிச்சோடிக் காணப்படும் வாக்குச்சாவடி மையம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 4:51 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கே.கரிசல்குளம் கிராமத்தில் சாலை வசதி, வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அக்கிராமத்தின் அருகே உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும்.

இது சம்பந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர், பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தென்காசி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை கே.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான கிராம மக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1,045 ஓட்டுகள் உள்ள கிராமத்தில் வெறும் பத்து ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. வெறிச்சோடிக் காணப்படும் வாக்குச்சாவடி மையத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செய்தியாளர்கள் பேசியதைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி மையத்தில் செய்தியாளர்கள் செய்திகளைச் சேகரித்தனர்.

தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற தென்காசி மாவட்டம், முழுவதும் சுமார் 1,700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், ஏழு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கே.கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததாக, மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்துத் தேர்தல் புறக்கணித்து பெரும்பாலான மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையி, 1,045 ஓட்டுகள் உள்ள நிலையில் இதுவரை 10 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வேங்கை வயலில் பதிவாகாத ஓட்டு.. பரந்தூர் பிரச்சனையால் ஏகனாபுரத்தில் வாக்குப்பதிவு மந்தம்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details