சென்னை:சுதந்திரத்திற்காக தனது 25-ஆவது வயதில் இன்னுயிரை ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் குறித்த புத்த வெளியீட்டு விழா, சென்னை முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, "நாட்டின் சுதந்திரத்திற்காக தனது 25ஆவது வயதில் தனது இன்னுயிரை ஈர்த்த சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன். இந்த இடத்தில் அவருக்கு என் மரியாதையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு சமூகங்களில் இருந்து வந்தவர்களும் ஒருங்கிணைந்து போராடியுள்ளனர். ஆனால் துயரம் என்னவெனில் அவர்கள் இந்நாட்டிற்காக என்னென்ன தியாகங்களை செய்துள்ளார்கள் என்பதில் பலவும் மறக்கப்பட்டுள்ளது. 1820களில் நம் சமூகத்தில் இருந்த கல்வி முறையில் மாணவர்களுக்கு கட்டணமில்லை.
ஆசிரியர்களுக்கு அவர்கள் வாழ்வதற்கு தேவையான உதவிகள் மட்டுமே சமூகத்தால் செய்து தரப்பட்டன. கல்வி முறை சிறப்பாக இருந்தது. மொழி, இசை, ஓவியம் என பாடங்கள் கற்பிக்கப்பட்டன. பிராமண, சத்திரிய, வைஷ்ணவ, சூத்திர என 4 பிரிவுகள் மட்டுமே இருந்தன.