தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர் பெயர் நீக்கம்: திமுக அரசு மீது ஈபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு! - edappadi palaniswami - EDAPPADI PALANISWAMI

silandhi river check dam: கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசுகள் தடுப்பணைகளை கட்டி தமிழகத்துக்கு வரும் தண்ணீரை தடுத்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

file pic
file pic (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 2:23 PM IST

கோவை: கோவை முன்னாள் மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தா.மலரவன் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் மலரவன் வீட்டிற்கு இன்று வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மறைந்த மலரவன், கோவை மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்த காலத்தில், கோவை நகரத்துக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்தவர்" என்று ஈபிஎஸ் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கேரள அரசு, இடுக்கி மாவட்டம் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவதுடன், விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என கூறினார்.

மேலும், கர்நாடக அரசும் மேகதாதுவில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி உள்ளது. இதேபோல் ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதில் குறியாக இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும்.

ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில், பல்வேறு தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுத்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டம் தீட்டியதாகவும், அதில் ஒன்று கட்டப்பட்ட நிலையில், அடுத்து வந்த திமுக அரசு தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்குகளை திமுக அரசு திட்டமிட்டு நீக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தமுள்ள 40 இடங்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதையும் படிங்க:இது தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு செய்யும் துரோகம் - அன்புமணி ராமதாஸ் சாடல்

ABOUT THE AUTHOR

...view details