சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 15 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, முகமது சலீமை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து நேரில் ஆஜர்படுத்தினர். அப்போது முகமது சலீமிடம், “அமலாக்கத்துறை காவலில் தங்களை எடுக்க மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். இதற்கு ஏதேனும் ஆட்சேபணம் தெரிவிக்கிறீர்களா?” என்று நீதிபதி கேட்டார்.