தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி: ஈரோடு வார சந்தையில் இருமடங்கு விலை உயர்ந்த வாழைத்தார்! - market in vinayagar Chaturthi - MARKET IN VINAYAGAR CHATURTHI

Vinayagar Chaturthi 2024: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூவன் ரக வாழைத்தார்கள் புஞ்சைபுளியம்பட்டி வார சந்தையில் இன்று இருமடங்கு விலை உயர்வுடன் விற்பனையானதால் வியாபாரிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புஞ்சைபுளியம்பட்டி வார சந்தை, வாழைத்தார்கள்
புஞ்சைபுளியம்பட்டி வார சந்தை, வாழைத்தார்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 6:11 PM IST

ஈரோடு:ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வார சந்தை இன்று வியாழக்கிழமை கூடியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூவன், ரஸ்தாளி, தேன் வாழை, நேந்திரன் உள்ளிட்ட பல்வேறு ரக வாழை தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சந்தையில் வாழைத்தார்கள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் ஆவணி மாத முகூர்த்தம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக வாழைப்பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இன்று சந்தைக்கு 2000க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர்.

கடந்த வாரம் 18 கிலோ எடை கொண்ட பூவன் ரக வாழைத்தார் 300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இரு மடங்கு விலை உயர்ந்து 600 ரூபாய்க்கு விற்பனையானது. கிராமங்களில் கடை வைத்திருப்போர் வாழை தார்களை மொத்தமாகவும், பொதுமக்கள் பழங்களை சீப்பாகவும் வாங்கி சென்றனர்.

இது குறித்து பேசிய வியாபாரிகள் “நாமக்கல் மாவட்டம் மோகனூர் பரமத்தி வேலூர், கொடுமுடி ஆகிய பகுதிகளில் விளையும் பூவன் ரக வாழைத்தார்களை கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வருவதாகவும், ஒரு தார் 15 கிலோ முதல் 18 கிலோ வரை எடை இருக்கும். ஒரு தாரில் 140 பழங்கள் முதல் 160 பழங்கள் வரை இருக்கும். இந்த வாரம் விநாயகர் சதுர்த்தி என்பதால் 600 ரூபாய்க்கு விற்பனையானது. அது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:சென்னையில் களைகட்டிய கோட் ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details