சென்னை: வடக்கிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (அக்.15) முதல் 17 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வரும் 16 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பின்வரும் அறிவுரைகள் வழங்கினார்.
அந்த வகையில், நாளை (அக்.15) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் நாளை முதல் 18.10.2024 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்