தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு! - chennai airport flights delay - CHENNAI AIRPORT FLIGHTS DELAY

chennai airport flight delay: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிப்பட்டன.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம் (credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 12:35 PM IST

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதையடுத்து அந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.

அதன்படி துபாயில் இருந்து 262 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், 314 பயணிகளுடன் தோகாவிலிருந்து வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், அபுதாபியில் இருந்து 248 பயணிகளுடன் வந்த எத்தியார்ட் ஏர்லைன்ஸ் விமானம், லண்டனில் இருந்து 368 பயணிகளுடன் வந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம், புனேயில் இருந்து 140 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் பிராங்பார்டிலிருந்து சென்னை வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆகிய 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்துக்கொண்டு இருந்தன.

அதன்பின்பு துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மற்ற விமானங்கள் நீண்ட நேரம் வானவில் வட்டமடிக்கு பறந்து கொண்டு இருந்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மழை நின்றதும் அந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

அதில் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பிச் சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபாய் விமானம், சென்னையில் இருந்து மீண்டும் அதிகாலை 4 மணிக்கு துபாய்க்கு புறப்பட வேண்டிய நிலையில், ஐந்தரை மணி நேரம் தாமதமாக, காலை 9.30 மணிக்கு, புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், பிராங்பார்ட், அபுதாபி, சார்ஜா, தோகா, துபாய், டெல்லி, அகமதாபாத் வரை செல்லும் 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சென்னை விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த, இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 15 விமான சேவைகள் பாதிப்படைந்ததையடுத்து பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க: ஜூன் 21 முதல் மூத்த குடிமக்கள் இலவச பயணத்திற்கான டோக்கன் விநியோகம்: எம்டிசி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details