தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்.. நெஞ்சை பிசையும் சோகம்.. ராணிப்பேட்டையில் நடந்தது என்ன? - ranipet wife murder - RANIPET WIFE MURDER

husband stabbed wife to death: ராணிப்பேட்டை அருகே குடிப்பதற்கு காசு கொடுக்காததால் காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லஷ்மி, அரவிந்தன்
லஷ்மி, அரவிந்தன் (dit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 11:57 AM IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காரை காட்டன் பஜார் தெருவை சேர்ந்த இளைஞர் அரவிந்தன் (34). இவரும் காரை பூங்காவனத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த லஷ்மி (26) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமானது.

இந்த தம்பதிக்கு தன்ஷிகா ஸ்ரீ (4) என்ற மகளும், சன்வித் (2) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் லஷ்மி வானாபாடி செல்லும் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த சூழலில், நேற்று காலை லஷ்மி வழக்கம் போல மருத்துவமனைக்கு பணிக்கு சென்று விட்டு வேலை முடிந்த பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்த லஷ்மி சமையல் வேலைகளை பார்த்து கொண்டிருந்த போது இரவு சுமார் 9.30 மணியளவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அரவிந்தன் குடிபோதையில், லஷ்மியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அரவிந்தன், மதுபோதையில் லஷ்மியை கத்தியை எடுத்து இடது பக்க கழுத்து, மார்பு மற்றும் இடது முழங்கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த லஷ்மி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து, அரவிந்த் வீட்டிலிருந்து தப்பி ஓட முயற்சித்த போது சாலையில் தடுக்கி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு லஷ்மியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், தலையில் பலத்த காயமடைந்த அரவிந்தனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் மனைவியை குடிக்க காசு கொடுக்காததால் கணவனே குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கல்யாண ராணி சத்யாவுக்கு உடந்தையாக இருந்த தமிழ்செல்வியின் முன் ஜாமீன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details