தமிழ்நாடு

tamil nadu

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கை.. ராமேஸ்வரத்தில் திமுக போராட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 2:06 PM IST

DMK Protest in Rameswaram: இலங்கை கடற்படை மற்றும் மத்திய அரசைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையை கண்டித்து திமுக போராட்டம்
தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையை கண்டித்து திமுக போராட்டம்

தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையை கண்டித்து திமுக போராட்டம்

ராமநாதபுரம்: இலங்கை கடற்படை தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை சிறை பிடிப்பது, சிறைபிடித்த படகுகளை அரசுடமையாக்குவது, தொடர்ச்சியாக மீனவர்கள் தாக்கப்படுவது, சிறைபடுத்தப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருவதை கண்டித்தும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், சிறைபிடித்து இலங்கை வசம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை விடுவிக்கக் கோரியும், திமுக சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்றது.

திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும், இந்த போராட்டத்தில் ராமநாதபுரம் திமுக மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், திமுக நகரச் செயலாளர் நாசர் கான், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 64 மீனவ குடும்பங்களுக்கு, திமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது; இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவது எப்போது? - ராமதாஸ் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details