தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக முப்பெரும் விழா தேதி மாற்றம்.. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு! - DMK Mupperum Vizha - DMK MUPPERUM VIZHA

DMK Mupperum Vizha Date Change: திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் வருகின்ற ஜூன் 1-ம் தேதி கோவையில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயம் புகைப்படம்
Anna arivalayam file image (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 12:24 PM IST

சென்னை:இது தொடர்பாகதிமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு, நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சீர்மிகு வெற்றிக்கு கட்சியை வழிநடத்திச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவருக்குப் பாராட்டு விழா என “முப்பெரும் விழா” ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14ஆம் தேதிக்கு பதிலாக "ஜூன்15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது.

திமுக தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், வெற்றி பெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். அனைத்து கட்சி மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விமானத்திற்குள் புகைப்பிடித்த பயணி.. மிரண்டு போன பணிப்பெண்.. அடுத்து நடந்தது என்ன? - Smoking inside flight

ABOUT THE AUTHOR

...view details