கோயம்புத்தூர்: கோவை பீளமேடு பகுதியில் திமுக சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "2021க்கு பிறகு முதல்வர் திட்டங்களால், தமிழ்நாடு முழுவதும் மக்கள் அச்சம் இல்லாமலும், போராட்டம் நடத்த வேண்டிய சூழல் இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிற்கு அரணாக திமுக ஆட்சி இருக்கிறது. பாஜக ஆட்சியில் 10 வருடங்களாகத் தென்னிந்தியா வஞ்சிக்கப்படுகிறது. அண்ணாமலை மற்றும் பாஜகவை பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
வெட் கிரைண்டர் தொழிலுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்தார்கள். தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்பத் தருகிறார்கள். தமிழ்நாடு மீது ஏன் வெறுப்பு? 1974ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கொங்குப் பகுதியைச் சேர்ந்த 24 சமுதாயங்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அருந்ததியர் இன மக்களுக்கு 3 சதவீத உள் கட ஒதுக்கீட்டை திமுக வழங்கியது.
இப்பகுதி இளைஞர்களுக்கு ஆபத்தாக அண்ணாமலை வந்துள்ளார். நான் கோட்டாவில் வந்தவன் அல்ல என அண்ணாமலை சொல்வது பொய். பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ஒதுக்கீட்டில் தான் அண்ணாமலை படித்து, ஐபிஎஸ் அதிகாரியாக வந்தார்.