தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணத்தில் திமுக பணப்பட்டுவாடா; அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு! - lok sabha election 2024

DMK Cash Distribution: கும்பகோணத்தில் பணப்பட்டுவாடா செய்ததாக 3 திமுக நிர்வாகிகளைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்
தஞ்சாவூர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 10:58 PM IST

Updated : Apr 18, 2024, 11:04 PM IST

கும்பகோணத்தில் திமுக பணப்பட்டுவாடா; அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் செக்கடித் தெருவில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ததாக கும்பகோணம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் 25வது வார்டு திமுக துணைச்செயலாளர் சிவக்குமார்(45), பார்த்திபன்(50), 24வது வார்டு துணைச்செயலாளர் கார்த்திகேயன்(42) ஆகிய 3 பேரையும் பிடித்துச் சோதனையிட்டனர்.

அப்போது, அவர்களிடம் 16,200 ரூபாய் ரொக்கமாக இருப்பது தெரிய வந்தது. பின்னர் விசாரணைக்காக அவர்கள் மூவரையும் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் பிடிபட்ட பணம் 16,200 ரூபாய் இல்லை, பிடிபட்டது 16 லட்சத்து 40 ஆயிரம் என தகவல் கும்பகோணம் மாநகர் முழுவதும் பரவியது.

இந்த நிலையில், இது குறித்த உண்மையை அறிவதற்காக நேற்றிரவு அதிமுக முன்னாள் எம்.பி ஆர்.கே. பாரதிமோகன், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவின் முதன்மை முகவர் கோமல் அன்பரசன் ஆகியோர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையம் வந்தனர்.

அப்போது அதிமுகவைச் சேர்ந்த மூவரையும் காவல் நிலையத்திற்குள் நுழைய விடாமல் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி மற்றும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசினர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட பறக்கும் படை அலுவலர்களிடமும் பேசினார். அப்போது அவர்கள், பிடிபட்ட பணம் முதலில் 16 லட்சம் என்றும் பின்பு 16 ஆயிரம் என்றும் கூறியதாகக் கூறப்படுகிறது. அதேபோல் இந்த பணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள ஒரு கடையில் பிடிபட்டது என்றும் பின்னர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் என்றும் கூறியதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என தெரிவித்தனர். மேலும், கண்டிப்பாக இவர்கள் 3 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த அவர்கள் களைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அன்று கழுதை! இன்று டிராக்டர்! மலைப்பாதையின் மலைக்க வைக்கும் கதை! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 18, 2024, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details