தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா? தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாதக புகார்! - NTK COMPLAINT CEO

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுக பணப்பட்டுவாடா செய்வதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக்கிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாதக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சங்கர்
நாதக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சங்கர் (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2025, 7:50 PM IST

Updated : Jan 28, 2025, 8:00 PM IST

சென்னை:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுக பணப்பட்டுவாடா செய்வதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக்கிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாதக வழக்கறிஞர் பிரவு மாநில செயலாளர் சங்கர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும், வேட்பாளர் சீதா லட்சுமி மீதும் ஆளும் கட்சியின் துண்டுதல் காரணமாக பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. ஆனால், விதிமுறைகளை மீறும் திமுகவினர் மீதும் அதன் கூட்டணி கட்சியினர் மீதும் அதிகாரிகள் எந்தவித வழக்கும் பதிவு செய்வதில்லை.

இதையும் படிங்க:யூ.ஜி.சி.-யின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெறும் வரை ஒய மாட்டோம் - அமைச்சர் கோவி.செழியன்!

நாம் தமிழர் கட்சி பிரச்சாரத்துக்கு திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையூறுகளை செய்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி சீமான் பிரச்சாரம் செய்தார் என பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி மீது பொய் வழக்கு போட்டு பிரச்சாரம் செய்ய விடாமல் முடக்குவதன் மூலம் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என திமுக திட்டமிடுகிறது.

எனவே, தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மத்திய பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும். இது மட்டுமின்றி கண்காணிப்பு குழுக்கள் எண்ணிக்கையை அதிகரித்து பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அனைத்து விதமான சட்டமீறல்களிலும் ஆளுங்கட்சி திமுக ஈடுபட்டு வருகிறது. இது குறித்து நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக எங்களுக்கு அவர் உறுதி அளித்துள்ளார்,"என்றார்.

Last Updated : Jan 28, 2025, 8:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details