நாடாளுமன்ற தேர்தல் 2024: திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்!
Dmk candidate List: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் 21 தொகுதிகளில் திமுக சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
சென்னை: நாடாளுமன்ற மக்களவைக்கான 18-ஆவது தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் முதலில் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கிய திமுக முதலில் தொகுதிப் பங்கீடு மட்டும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இறுதிப்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியை பொருத்தவரையில் தலைமை வகிக்கும் திமுக 21 இடங்களில் போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 10, விசிக-2, சிபிஎம்-2, சிபிஐ-2, மதிமுக-1, ஐயூஎம்எல்-1, கொ.ம.தே.க-1 முறையே கூட்டணிக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் தங்களது வேட்பாளரை அறிவித்துள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.