தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல்பட்டில் டெங்குவால் ஒருவர் உயிரிழப்பா? - மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் விளக்கம்! - Dengue - DENGUE

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாவட்ட சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

டெங்கு சிகிச்சை வார்டு
டெங்கு சிகிச்சை வார்டு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 9:49 PM IST

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 66 பேருக்கு காய்ச்சல் இருப்பதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 வயதுடைய ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக வரும் செய்தி வதந்தி. அந்த தகவல் உன்மையானது அல்ல என செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் பரணிதரன் தகவல் தெரிவித்தார்.

இதையும் படிங்க :மதுரை தீ விபத்து: பாதிக்கப்பட்ட தனியார் விடுதி பெண்களுக்கு மாற்று ஏற்பாடுகள் என்ன? ஆர்டிஓ ஷாலினி விளக்கம்! - madurai hostel fire accident

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை, சென்னை புறநகர் பகுதி என்பதால் தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதியில் தான் டெங்கு காய்ச்சல் தொடர்பான பாதிப்புகள் அதிகம் உள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், மாவட்டம் முழுவதும் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருவவாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை அறிவுரைகள் : காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவனைக்கு நேரில் சென்று மருத்துவரிடம் அறிவுரை கேட்க வேண்டும். பொதுமக்கள் தங்களின் வீடுகள் மற்றும் பொது இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் கொசு உருவாகுவதை தடுக்க வேண்டும். தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details