தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி கொலை வழக்கு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பு - Thoothukudi murder case - THOOTHUKUDI MURDER CASE

Thoothukudi District Court: கடந்த 2018ஆம் ஆண்டு சண்முகம் என்பரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 7:51 AM IST

தூத்துக்குடி: கடந்த 21.07.2018 அன்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெய்வச்செயல்புரம் வடக்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சண்முகம் (65) என்பவரை அவரது வீட்டருகே வைத்து முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் ஆறுமுகம் (65) என்பவரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் அவர்கள் புலன் விசாரணை செய்து கடந்த 14.12.2018 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை நேற்று (திங்கட்கிழமை) விசாரித்த நீதிபதி உதயவேலன் குற்றவாளியான ஆறுமுகம் என்பவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 302 பிரிவின் படி, ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் இந்திய தண்டனைச் சட்டம் 506(2) பிரிவின் படி 7 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5000 அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் கார்த்திகேயன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: மத்திய அரசின் மூன்று குற்றவியல் திருத்தச் சட்டங்களுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு! - New Criminal Laws

ABOUT THE AUTHOR

...view details