சென்னை: பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்வது குறித்து தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. வெப்பநிலை அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் மக்களுக்குப் பயனுள்ள சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள மருந்து கிடங்குகள், அனைத்து சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் மருந்துகளை வைக்கும் குளிர் சங்கிலி அறையில் போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சுவர்களுக்கும், மருந்து அலமாரிக்கும் இடையில் போதிய இடைவெளி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இது சுவர்களிலிருந்து வரும் வழக்கமான வெப்பத்தால் மருந்துகள் சேதமடைவதைத் தடுக்கும்.