வேலூர்:வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவு கேட்டு இயக்குநர் சுந்தர்.சி, வேலூர் மாநகர் பகுதிகளான சங்கரன் பாளையம், சாய்நாதபுரம், விருபாட்சிபுரம், ஓட்டேரி, பாகாயம், மண்டித்தெரு, காந்திரோடு, உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், " சினிமாவில் ரஜினி போன்ற எத்தனையோ ஹீரோக்கள் கூட வேலை பார்த்து இருக்கிறேன். ஆனால், என் வாழ்நாளில் முதல் முறையாக ஒரு நிஜ ஹீரோவுடன் வேலை பார்க்கிறேன் என்றால் அது ஏ.சி.சண்முகம் கூடத் தான். ஏனென்றால் எத்தனையோ உதவிகள், பொதுச் சேவைகள், மாணவர்களுக்கு இலவசமாகப் பள்ளி வகுப்பறைகள் கட்டிக் கொடுப்பது போன்ற சேவைகள்தான் அவரை ஒரு ஹீரோவாகக் காட்டுகிறது.