திண்டுக்கல்:கொத்தம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.12 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் இணைந்து பணியாற்றலாம் என மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கை குறித்து கேட்ட கேள்விக்கு, “அரசு ஊழியர்கள் எந்த கட்சியும், எந்த மதத்தையும் சாராமல் பணிபுரிய வேண்டும். ஒரு மதத்தை வளர்க்கக்கூடிய சூழ்நிலையாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து பணியாற்றலாம் என்பது சரியான முறை அல்ல என்றார்” என்றார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்பது குறித்த கேள்விக்கு, “நிதி கொடுக்கவில்லை என்பது உண்மை. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதில் எங்களுக்கும் உடன்பாடுதான்” என்றார். மேலும், ஆம்ஸ்டராங் கொலை தொடர்பாக பல ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது என்றார்.