திண்டுக்கல்: இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் பிரதீப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, நேற்று தனது வீட்டிலிருந்து கல்லூரி செல்வதற்காக பேருந்து மூலம் தேனி பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கி, அருகிலிருந்த கழிவறைக்ச்கு சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை இன்னோவா காரில் கடத்தி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பின்னர் தன்னை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதாகவும், தான் ஒரு ஆட்டோ மூலம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையம் வந்து புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரினை பெற்று விசாரணை செய்து, இது தொடர்பாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்.16/24 u/s 87, 70(1) BNS வழக்குப்பதிவு செய்து அம்மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.