சென்னை : சென்னை பெரம்பூர் பாரதி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்க அலுவலக கட்டடத்தில் சங்கத்தின் மாநில தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சிறு, குறு வணிகம் செய்யும் வணிகர்கள் மற்றும் வாடகைதாரர்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள 18% ஜிஎஸ்டி வரி என்பது ஏற்புடையது அல்ல. மத்திய, மாநில அரசுகள் இந்த 18 சதவீத ஜிஎஸ்டி
வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
டைமன் ராஜா வெள்ளையன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) சிறு, குறு வணிகம் செய்யும் வணிகர்கள் இந்த தொழில்களில் போதிய லாபம் மற்றும் வருமானம் இல்லாமல் தவித்து வரும் சூழ்நிலையில், அவர்கள் கொடுக்கும் கடை வாடகைக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்கிற மத்திய அரசின் இந்த வரி விதிப்பானது வணிகர்களை நசுக்கும் ஒரு செயல்.
இதையும் படிங்க :ஊழல் கறையோடு வந்த அதிகாரி..திருப்பி அனுப்பிய ஆணையர்; உதவி கமிஷனர் நியமனத்தின் பின்னணி என்ன?
மேலும், மத்திய அரசு இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளும், பாதிப்புகளும் வணிகம் செய்யும் வணிகர்கள் மட்டுமின்றி வாடகைதாரர்கள் மற்றும் பொதுமக்களையும் பெரிய அளவில் பாதிக்கும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பாதிப்பை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் இந்த வாடகைக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியினை உடனடியாக ரத்து செய்து தர வேண்டும். இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சரை சந்தித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் சார்பாக கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.
இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் டைமண்ட் ராஜா மாநில பொதுச் செயலாளர் ராகவேந்திரா மணி, மாநில பொருளாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.