தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரம் ஆதீனகர்த்தரின் உதவியாளர் அதிரடி பணி நீக்கம்: காரணம் என்ன? - Dharmapuram adheenam issue - DHARMAPURAM ADHEENAM ISSUE

Dharmapuram Athina Karthar assistant dismissed : தருமபுரம் ஆதீனகர்த்தரின் உதவியாளராக பணிபுரிந்த திருவையாறு செந்தில் பணி ஒழுங்கீனம் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று ஆதீனத்தின் பொதுமேலாளர் ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Dharmapuram Athina Karthar assistant
தருமபுரம் ஆதீனகர்த்தரின் உதவியாளர் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 11:08 PM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக, ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில், ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ உள்ளதாக கூறி மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸார் தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத், செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, நெய்குப்பை ஸ்ரீநிவாஸ், செம்பனார்கோவில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார், செங்கல்பட்டு அதிமுக வழக்கறிஞர் பிரிவு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, முதல்கட்டமாக வினோத், விக்னேஷ், ஶ்ரீநிவாஸ், குடியரசு ஆகிய 4 பேரை சிறப்பு போலீசார் கைது செய்து மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து, காசி ஞானரத யாத்திரையில் தருமபுர ஆதீனத்துடன் ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில் உடனிருந்தார். இந்த புகைப்படத்தை செந்தில் ஆதீனத்தின் முகநூல் பக்கத்தில் வெளிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை, காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர்.

சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பலமுறை மனு தாக்கல் செய்த நிலையில், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படாததால் ஜாமின் வழங்க காவல்துறை ஆட்சேபம் தெரிவித்ததால் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, வழக்கில் தொடர்புடைய உள்ளுரிலேயே சுற்றி வரும் குற்றவாளிகளை கைது செய்யாமல் மயிலாடுதுறை போலீசார் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக, இந்து முண்ணனி மற்றும் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் சார்பாக ஆதீனத்தின் பொது மேலாளர் ரங்கராஜ், இன்று வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், “தருமபுரம் ஆதீனகர்த்தரின் உதவியாளராக பணிபுரிந்த திருவையாறு செந்தில் பணி ஒழுங்கீனம் காரணமாக, கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், அவருடன் ஆதீனம் மற்றும் ஆதீனக் கோயில்கள் குறித்து யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"பாகிஸ்தான் மரியாதைக்குரிய நாடு... அவர்களிடம் அணுகுண்டு உள்ளது" -மணிசங்கர் ஐயரின் கருத்தால் சர்ச்சை! - Mani Shankar Aiyar

ABOUT THE AUTHOR

...view details