தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் கடல் சீற்றம்.. பக்தர்கள் குளிக்க தடை! - Tiruchendur Sea

Tiruchendur Subramania Swamy Temple: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கடல் புகைப்படம்
திருச்செந்தூர் கடல் புகைப்படம் (credit to Etv Bharat tamil nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 6:35 PM IST

தூத்துக்குடி: தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு, அரை அடி முதல் ஒன்றரை அடிக்கு கடல் அலை எழும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே உள்ள கடல் சீற்றத்துடன் காணப்பட்டு, சுமார் 50 அடி வரை வெளியே வந்தது. இதனால் பக்தர்கள் கடலில் புனித நீராடத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, போலீசார் மற்றும் கடல் பாதுகாப்பு குழுவினர் பக்தர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து, கடற்கரைப் பகுதியிலிருந்து பக்தர்கள் வெளியேறும்படி தெரிவித்தனர். இதனால் கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதையும் படிங்க:எல்லை தாண்டிய இன்ஸ்டாகிராம் மோகம்.. மனைவியைக் கொலை செய்த கணவர்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன? - Husband Killed Wife In Thoothukudi

ABOUT THE AUTHOR

...view details