தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவதில் ஆட்சேபனை இல்லை”.. தயாநிதி மாறன்! - Dayanidhi Maran on EPS Appear - DAYANIDHI MARAN ON EPS APPEAR

அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என நீதிமன்றம் கருதினால், தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தயாநிதி மாறன் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தயாநிதி மாறன் மற்றும் எடப்பாடி பழனிசாமி
தயாநிதி மாறன் மற்றும் எடப்பாடி பழனிசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2024, 1:48 PM IST

சென்னை: சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்பியாக இருந்த தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல், தொகுதி நிதியில் 95 சதவீதம் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த முறை நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார்.

இதையும் படிங்க:மீண்டும் அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி மைத்ரேயன்! திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம்?

தொடர்ந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமியின் மனுவுக்கு பதில் மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தாக்கல் செய்தார்.

அதில், தனக்கு வயது 70 ஆகிறது என்றும், வயது மூப்பு காரணமாகவும், மருத்துவக் காரணங்களால் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததால், அவரது கோரிக்கை நியாயமானதாக நீதிமன்றம் கருதினால், ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, வழக்கின் மீதான விசாரணையை நீதிபதி செப்டம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details