தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல் சூளையில் தேங்கிய நீரில் மூழ்கி அண்ணன் - தங்கை உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் கணிசபாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூலையில் தேங்கி இருந்த தண்ணிருக்குள் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

உயிரிழந்த பிரதிஷா மற்றும் தர்ஷ்வன்
உயிரிழந்த பிரதிஷா மற்றும் தர்ஷ்வன் (Credits- ETV Bharat Tamil Nadu)

கடலூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை முசிறி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர் இவரது மனைவி ஜானகியுடனும், பெங்களூரில் தனியார் பள்ளியில் படிக்கும் இரண்டு பிள்ளைகளுடனும் கடலூர் நத்தம் கிராமத்தில் உள்ள அவரது சகோதரி மகாலட்சுமியை பார்க்கச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மகாலட்சுமி கணவர் கணபதி கணிசபாக்கம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து செங்கல் சூலை வியாபாரம் செய்து வருகிறார். இதனை பார்ப்பதற்காக மஞ்சுநாதன் தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியோடு அங்கு சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் சூளை போடுவதற்காக மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. இதன் அருகே மஞ்சுநாதனின் மகன் தர்ஷ்வன் (வயது 12) மகள் பிரதிஷா (வயது 7) ஆகிய இரண்டு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க:யானையை வேடிக்கை பார்க்கச் சென்ற ஓட்டுநர் பலி.. நீலகிரியில் நடந்தது என்ன?

இருவரும் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணிக்குள் விழுந்துள்ளனர். அப்போது பிள்ளைகள் தண்ணிக்குள் முழுகியதை பார்த்த தாய் ஜானகி அதிர்ச்சடைந்துள்ளார். பின் கூச்சலிட்ட நிலையில் அங்கிருந்த உறவினர்கள் மற்றும் சூளை ஆட்கள் தண்ணிக்குள் மூழ்கிய இரு பிள்ளைகளையும் மீட்டுள்ளனர். பின் உடனடியாக இருவரையும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிய நிலையில் கணிசபாக்கம் போலீசார் அவர்களது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கணிசபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details