தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே கொற்கை ஊராட்சியில் ‘நவம்பர் புரட்சி தின கொடியேற்ற விழா’ இன்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூ கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்றார். முன்னதாக கும்பகோணம் தனியார் தங்கும் விடுதியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதுமான அளவிற்கு தண்ணீர் இல்லாததாலும், உரிய காலத்தில் மழை இல்லாததாலும் தாமதமாக நீர் திறக்கப்பட்டது. ஆகையால் டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சாகுபடியான சம்பா தான் இந்த முறை விளைச்சல் கொடுத்துள்ளது.
சிபிஐ மாநில செயலாளர் இரா. முத்தரசன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை. கூடுதலாக கடன் கொடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகள் விவசாயிகளுக்கு நகை கடன்கள் கூட வழங்குவதில்லை. பொதுத்துறை வங்கிகள் நகைக்கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க:"விஜய் படத்திற்கு தினமும் முத்தம் கொடுப்பேன்"- நண்பா, நண்பிகளையே மிஞ்சிய நெல்லை பாட்டி..!
கூட்டுறவு சங்கங்களில் உரம் பூச்சி மருந்து தாராளமாக கிடைக்க செய்ய வேண்டும். வெளி சந்தையில் தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு இவற்றை விற்பனை செய்கிறார்கள். பயிர் காப்பீட்டு திட்டத்தால் விவசாயிகளுக்கும் எந்த பயனும் இல்லை, அரசிற்கும் இழப்பு தான் ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக லாபம் பார்க்கின்றனர்.
ஒரு மாவட்டத்தில் 300 ஊராட்சிகள் இருந்தால் 50 முதல் 60 ஊராட்சிகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்கி விட்டு வேறு பாதிப்பு இல்லை என கூறி விடுகிறார்கள். எனவே இதனை முன்பு போலவே அரசே ஏற்று நடத்திட வேண்டும். தொடக்கப்பள்ளிகளை நடுநிலை பள்ளிகளுடன் இணைப்பு பிரச்சனை தவிர்க்கப்பட வேண்டும். நடிகர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சிக்கதானே அவர் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். விஜய் தவெகவின் கொள்கை குறித்து கூறுவது அரைத்த மாவையே அரைப்பது போல் உள்ளது. இதனால் மாவு தான் வீணாகும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்