மதுரை:மதுரையில் அறுந்து விழுந்த வயரால் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். கோடையின் கடும் வெயிலில் தவித்து வந்த மதுரைக்கு, நேற்றைய தினம் பெய்த மழை சற்று குளிர்ச்சியூட்டியது எனலாம். இந்நிலையில் மதுரை, டி.வி.எஸ் நகர் அருகே துரைசாமி சாலை பகுதியில் வசித்து வந்தவர்கள் முருகேசன், அவரது மனைவி பாப்பத்தி. இவர்கள் பலசரக்கு கடை நடத்தி வருகின்றனர்.
அன்று இரவு கடையை அடைத்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவியும், சைக்கிளில் அவர்களது மகனும் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அப்போது, சந்தான சாலையைக் கடக்கும் பொழுது பலத்த காற்று வீசியதால், மின்சாரம் வயர் அறுந்து தொங்கிய படி இருந்துள்ளதை மகன் பார்த்துள்ளார். இதனால் அவர் ஓரமாகச் சென்றுள்ளார்.