தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கல்லூரி வாயிலில் மாணவி கொலை; இளைஞருக்கு ஆயுள் தண்டனை! - மாணவியை கத்தியால் குத்திய இளைஞன்

Stabbing College Girl: சென்னையில் கல்லூரி வாயிலில் மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 4:05 PM IST

சென்னை: சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவர் கே.கே.நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவர், அஸ்வினி கல்லூரி செல்லும் போதெல்லாம் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அஸ்வினி, போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார், அழகேசனை கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் வெளியில் வந்த அழகேசன், கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி வாயிலில் வைத்து அஸ்வினியை கத்தியால் குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அஸ்வினியை, அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, அஸ்வினியை கத்தியால் குத்திய அழகேசனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி T.H.முகமது ஃபாரூக் விசாரித்தார். வழக்கில், அழகேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுள்ளதாகக் கூறி. அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியத்திலிருந்து, அஸ்வினியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

இதையும் படிங்க:அரசியலுக்கு திடீர் முழுக்கு போட்ட கவுதம் கம்பீர்? திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details