ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் கோடைக்காலத்தில் மழைப் பொழிவு இல்லை. இதனால் அந்த வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வந்தது. வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து, பசுமை நீங்கிக் காணப்பட்டது. ஓடைகள் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் வற்றி வனவிலங்குகளுக்கான உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை பொழிவால் காய்ந்து கிடந்த மரம், செடி, கொடிகள் துளிர்த்து தற்போது பச்சைபசேலென அழகாகக் காட்சியளிக்கிறது.
பச்சைப்பசேலென காட்சியளிக்கும் சத்தியமங்கலம் வனப்பகுதி (VIDEO CREDITS- ETV Bharat Tamil Nadu) மேலும், இந்த தொடர் மழை மீண்டும் வனப்பகுதியைப் பசுமையாக மாற்றி வனவிலங்குகளின் உணவு பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுத்தியுள்ளது. இதனால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது வனப்பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் தங்களுக்கான உட்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வனப்பகுதி பசுமையாக மாறி காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் சத்தியமங்கலத்திலிருந்து திம்பம் மலைப்பாதை வழியாகக் கர்நாடக செல்லும் வாகன ஓட்டிகள் இயற்கை எழில் கொஞ்சம் பசுமை மலை முகடுகளை ரசித்தபடி பயணிக்கின்றனர். குறிப்பாக சாலையோரத்தில் சுற்றித்திரிந்த மான்களை காண்போரை கவர்ந்தது.
இதையும் படிங்க:அரிக்கொம்பன், படையப்பா வரிசையில் புது யானை.. 20வது முறையாக ஒரே கடை சூறையாடல்!