பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் 102 தொகுதிகளில் முடிவடைந்துள்ள நிலையில் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்றுடன் ஓய்வடைகிறது. நேற்று பெங்களூருவில் காங்கரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியில் பொதுச்செயலாளர் பிரியங்கா பரப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் பெண்களின் தாலியை பறிக்க நினப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. உங்களுடைய தாலியை காங்கிரஸ் பறித்துள்ளதா?" என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் மோடி ராஜஸ்தானில் நடந்த பிரச்சார கூட்டத்தில், மக்களின் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை காங்கிரஸ் கட்சி, வந்தேரி மற்றும் அதிக குழந்தை பெற்றெடுக்கும் இஸ்லாமியர்களுக்கு கொடுக்க முயற்சி செய்கிறது என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கும் வந்தால் தாய்மார்களில் தாலி மற்றும் தங்கம் கொள்ளையடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நாட்டில் போர் நிலவிய போது, நாட்டிற்காக தன்னுடைய தங்கத்தை தியாகம் செய்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. அதேபோல், என்னுடைய அம்மா நாட்டிற்காக தனது தாலியை தியாகம் செய்துள்ளார்" எனக் கூறிய தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து பேசினார்.
தாலியின் மகத்துவம் அறியாதவர் பிரதமர் மோடி: மேலும் பேசிய அவர், "பிரதமர் மோடி தாலியின் முக்கியத்துவத்தை குறித்து அறிந்திருந்தால் இப்படி பேசி இருக்க மாட்டார். நாட்டின் பெண்களின் சேவை மனப்பான்மை தான் இந்தியாவின் கலாசாரம் அனைத்திற்கும் அடித்தளம்.
தனது குடும்பம் ஏதேனும் இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டால், தனது நகையை அடமானம் வைக்கக்கூடியவர்கள் பெண்கள். தான் பட்டினியாக தூங்குவார்களே தவிர, குடும்பத்தில் உள்ள மற்றவர்களை பசியுடன் தூங்க விடமாட்டார்கள். குறிப்பாக, விவசாயிகள் கடனில் சிக்கிக் கொண்ட போது, அவர்களின் மனைவிகள் தங்கள் தாலியைக் அடமானம் வைத்தார்கள்.
மேலும், மகளின் திருமணத்திற்காக அல்லது குடும்பத்தில் யாராவது உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவர்களின் சிகிச்சை செலவுகளுக்காகவும் பெண்கள் அவர்களது தங்க நகைகளை அடமானம் வைக்கின்றனர். பெண்கள் படும் இந்த கஷ்டம் பாஜவினருக்கு ஒரு போதும் தெரியாது" என கடுமையாக சாடினார்.
பெண்கள் கஷ்டப்படும் போது பிரதமர் மோடி எங்கே சென்றார்: தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, "2016ஆம் ஆண்டு நடந்த பண மதிப்பிழப்பின் போது பெண்கள அவர்களிடம் இருந்த சிறு சேமிப்பு பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது. அதேபோல், கோவிட் ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவின்றி சிக்கி தவித்தபோது, பெண்கல் தங்களுடைய நகைகளை அடமானம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதெல்லாம் இவர் (பிரதமர் மோடி) எங்கே சென்றார்.
மேலும், விவசாயிகளின் போராட்டத்தின் போது மரணமடைந்த 600 விவசாயிகள் மனைவிகளின் தாலியை குறித்து பிரதமர் மோடி ஏன் நினைத்து பார்க்கவில்லை? மனிப்பூரில் பெண் ஒருவர் நாட்டு மக்கள் முன்பு நிர்வாணப்படுத்தப்பட்டார் அபோது பிரதமர் மோடி மௌனம் காத்தது ஏன்? அந்த பெண்ணின் தாலியை குறித்து ஏன் அவர் சிந்திக்கவில்லை" என சரமாரி கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து, "தேர்தல் சமையத்தில் மக்களை அச்சுருந்த்தி வாக்கு பெருவதற்காக மட்டுமே, பிரதமர் மோடி இது போன்று பேசி வருகிறார். இதற்காக அவர் வெட்கப்பட வேண்டும். மக்கள் சிந்திக்க வேண்டிய தருனம் இது. இப்போது விழித்துக் கொள்ளவில்லை என்றால், இந்த நாடு பாதாளத்திற்குச் சென்றுவிடும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:5 ஆண்டுகளில் 41 சதவீதம் உயர்ந்த ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துமதிப்பு!