தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் மற்றும் கண்ணாடி மணி கண்டெடுப்பு..! - VIJAYAKARISALKULAM EXCAVATION

விருதுநகர் விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல் மற்றும் கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சங்கு வளையல், கண்ணாடி மணி
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சங்கு வளையல், கண்ணாடி மணி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2025, 3:26 PM IST

விருதுநகர்: விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் மற்றும் கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மணி, வட மாநிலங்களில் இருந்து வாங்கி வரும் சங்குகளை வைத்து வளையல்களை தயாரிக்கும் போது முன்னோர்கள் பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 16 குழிகளில், உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், வட்டச்சில்லு, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3,020 பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது தோண்டப்பட்ட குழியில் சங்கு வளையல் மற்றும் கண்ணாடி மணி கிடைத்துள்ளது.

இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுசாமி, நம் முன்னோர், வட மாநிலங்களில் இருந்து சங்குகளை பெற்று வளையல்களை தயாரித்துள்ளனர். அதில் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அலங்காரம் செய்துள்ளனர் என்பது நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details