தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுக்கடுக்காக குவிந்த கந்து வட்டி புகார்.. கரூரில் திமுக பிரமுகர் அதிரடி கைது! - Karur DMK Worker arrest - KARUR DMK WORKER ARREST

KARUR DMK THIRUVENKATAM ARREST: கரூர் கடவூர் பகுதியில் அதிக வட்டி வசூலிப்பதாக குவிந்த புகாரின் அடிப்படையில், திமுக பிரமுகர் திருவேங்கடத்தை பாலவிடுதி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைதுச் செய்யப்பட்ட திருவெங்கடம்
கைதுச் செய்யப்பட்ட திருவெங்கடம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 10:38 PM IST

கரூர்:கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மனைவி சண்முகப்பிரியா, கடவூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பதவி வகித்து வருகிறார். தனது மனைவி திமுகவில் ஒன்றிய துணைச் செயலாளர் பொறுப்பில் இருப்பதை வைத்து, மக்கள் பணி செய்வதாகக் கூறி பணத் தேவை உள்ளவர்களைக் கண்டறிந்து, குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை வட்டிக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், முறையாக வட்டித்தொகை செலுத்தினாலும், வட்டிக்கு வட்டி கணக்கு செய்து கடன் தொகையை அசலில் சேர்த்தும், குறிப்பிட்ட தேதிக்குள் கடன் தொகையைச் செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்து கடன் பெறுவோரை நெருக்குதலுக்கு உள்ளாக்கியாதாக கூறப்படுகிறது. இதற்கு ஒத்து வராதவர்களை பொது இடத்தில் வைத்து திட்டி அவமானப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இது குறித்து கேள்வி கேட்போரை, தனது வீட்டுக்கு வரவழைத்து அங்கு தகாத வார்த்தைகளால் பேசி கடன் பெற்றவர்களை தாக்குவதாக பாலவிடுதி காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் குவிந்துள்ளது. இது குறித்து காவல்துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததாகக் கூறி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மற்றும் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட பிரோஸ் கான் அப்துல்லா ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் கண்ணீர் மல்க கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, கடவூர் அருகே உள்ள முள்ளிப்பாடி ஊராட்சியில் வசிக்கும் கருப்புசாமி (59) என்பவர், திருவேங்கடமிடம் வாங்கிய நான்கு லட்சம் கடன் தொகையை திரும்பச் செலுத்திய பிறகும், அசல் தொகை அப்படியே உள்ளது எனக் கூறி வெற்று பத்திரம் உள்ளிட்ட வீடு நிலம் சம்பந்தமான பத்திரங்களை, மிரட்டி வாங்கியதாக நேற்று ஆகஸ்ட் 18ஆம் தேதி பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். அதன்பேரில் திருவேங்கடத்தை போலீசார் கைது செய்தனர்.

மேலும், குளித்தலை நீதிமன்றத்தில் திருவேங்கடத்தை ஆஜர் செய்து குளித்தலை கிளைச் சிறையில் அடைத்துள்ள நிலையில், இன்றும் (ஆகஸ்ட் 19) மேலும் இரண்டு வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:2 லட்சம் கடனுக்கு ரூ.2 கோடி வட்டி.. "தென் மாவட்டங்களில் தொடரும் கந்துவட்டி கொடுமை" - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details