தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tancet 2025: முதுகலைப் பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்விற்கு விண்ணப்ப தேதி அறிவிப்பு! - TANCET 2025

முதுகலைப் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விற்கு ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 21ந் தேதி வரை விண்ணப்பம் நடைபெறவுள்ளது.

அண்ணா பல்கலை கழகம்
அண்ணா பல்கலை கழகம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2025, 4:43 PM IST

சென்னை: முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்ஆர்க் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்விற்கு (டான்செட்2025 ) ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 21ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணாப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும், முதுகலைப் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பிக்கும் போதே கலந்தாய்விற்கும் சேர்த்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் முதுகலை தொழிற் கல்விப் படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு மூலம் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கும், முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகியவற்றிற்கு ( CEETA-PG )நுழைவுத் தேர்வு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.

பல்கலை இணையதளம் (credit - ETV Bharat Tamil Nadu)

இது குறித்து அண்ணா பல்கலைக் கழக பொது நுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '' முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விற்கு (டான்செட்2025 ) ஜனவரி 24ந் தேதி முதல் பிப்ரவரி 21ம் தேதி வரை https://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

MCA ,MBA படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 500 ரூபாயும், பிற வகுப்பினருக்கு 1,000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு மார்ச் 22ந் தேதி நடைபெறுகிறது.

CEETA, எம்.இ., எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 900 ரூபாயும், இதர பிரிவினருக்கு 1,800 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கு கலந்தாய்வு கட்டணமும் இதில் அடங்கும். இவர்களுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 23 ந் தேதி நடைபெறுகிறது.

கட்டணம் செலுத்தி ஹால் டிக்கெட்

https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் மாணவர்கள் கட்டணங்களை செலுத்த வேண்டும். இதே இணைய தளமுகவரியில் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.

அறிவிப்பு (credit - ETV Bharat Tamil Nadu)

பிஇ, பிடெக் பட்டத்தை தொலைத்தூரக்கல்வி மூலமோ அல்லது வார இறுதி நாட்களில் நடைபெறும் வகுப்பு மூலமோ பயின்றவர்களுக்கு நுழைவுத்தேர்வினை எழுத தகுதியில்லை. மேலும் 10,12 ம் வகுப்பு, 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கும் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் படிப்பில் சேர தகுதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் வினா விடைகளுக்கு அளிக்கப்படும் மதிப்பெண் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், பாகூர் ஆகிய 15 இடங்களில் நடைபெறும். மேலும் விபரங்களை பெறுவதற்கு செயலளார், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு , நுழைவுத்தேர்வு மையம், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை என்ற முகவரியிலோ அல்லது 044-2235 8289 , 044-2235 8314 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.

மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறும். கடைசி நேரத்தில் ஏற்படும் தடங்களை தவிர்க்க முன்னரே விண்ணப்பிக்கவும். மாணவர்களுக்கு தேர்விற்கான வினாத்தாள் https://tancet.annauniv.edu/tancet/#home என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர்வதற்கு தனியாக விண்ணப்பம் அளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details