சென்னை:இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்த திரைப்படம் அமரன். இப்படம் கடந்த தீபாவளியன்று வெளியானது. இத்திரைப்படத்தில், நடிகை சாய் பல்லவி (கதாநாயகி) தமது செல்ஃபோன் எண் என்று குறி்ப்பிட்டு ஒரு எண்ணை துண்டு சீட்டில் எழுதி கதாநாயகனிடம் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில், இந்த செல்ஃபோன் எண் இடம்பெற்றுள்ள காட்சி தற்போது விவகாரமாக உருவெடுத்துள்ளது. சென்னை போரூரில் தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வரும் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த வாசீகன் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 'தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படத்தில் எனது கைபேசி எண்ணை நடிகை சாய் பல்லவியின் எண்ணாக படத்தில் காண்பிக்கப்பட்டு காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி முதல் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின் குறிப்பிட்ட காட்சியை நிறுத்தி விடுவதாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், அந்த
காட்சி நீக்கப்படாததால், தொடர்ந்து எனக்கு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.