சென்னை:சென்னை பாரிஸ் கிளேவ் பேட்டரி பகுதியை சேர்ந்தவர் கவிஅரசு (19). இவர் மயிலாப்பூர் தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவரது வகுப்பு நண்பர் ஆதி உள்ளிட்ட ஆறு பேருடன் சேர்ந்து இன்று கல்லூரியில் மாதிரி தேர்வை முடித்துவிட்டு மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அப்போது மெரினா கடலில் குளிக்கும்போது எதிர்பாரத விதமாக ராட்சத அலை அடித்ததில் ஆதி மற்றும் கவி அரசு கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதை பார்த்து செய்வதறியாமல் கரையில் நின்று கொண்டிருந்த நண்பர்கள் கடல் அலை அடித்து சென்ற நண்பர்களை கடலுக்கு இறங்கி தேடி ஆரம்பித்துள்ள்னர்.ஆனால் அவர்களை கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க:கோவையில் வீடு புகுந்து ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை! குடியிருப்பு வாசிகள் அச்சம்