தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கோவை இதுவரை கண்டிராத வளர்ச்சியை அடையும்" - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை! - Minister TRB Rajaa

Minister TRB Rajaa: கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் வரவுள்ளது, இதனால் கோவை இதுவரை கண்டிராத வளர்ச்சியை அடையும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 6:31 PM IST

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திமுகவினர் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா கலந்து கொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

"ஒட்டு மொத்த இந்திய அரசியலிலும் வெற்றியை மட்டுமே கண்ட தலைவர் கலைஞர் என்றார். இன்றைய நாளில் அவரை கொண்டாடி வருகிறோம். முதலமைச்சர் தமிழகத்திற்கு மூன்றே ஆண்டுகளில் மகத்தான சாதனைகள், மகத்தான நலத்திட்டங்களை பொது மக்களுக்கு, தாய்மார்களுக்கு, இளைஞர்களுக்கு அற்புதமான நலத்திட்டங்களைக் கொடுத்து வருகிறார்.

அவர் செய்து இருக்கும் இருக்கும் இந்த சாதனை காரணமாக நாளை 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். இந்த வெற்றியை மக்கள் எங்களுக்குக் கொடுப்பார்கள். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் மகத்தான வளர்ச்சியை அனைத்து துறைகளிலும் முதலமைச்சர் செய்து காட்டுவார் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த மூன்று ஆண்டுகளில் செய்த சாதனைகளை விட இன்னும் அற்புதமான திட்டங்கள் மக்களுக்குக் காத்து இருக்கின்றனர். அதிலும் குறிப்பாகக் கோவை மாவட்டத்திற்கு நாங்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளைப் போலவே மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்கள், தொழில் திட்டங்கள், சிறு குறு தொழிலாளர்கள் திட்டங்கள் அடுத்த கட்டமாகக் காத்து இருக்கின்றது. வரப்போகும் இந்த 2 ஆண்டுகள் கோவை இதுவரை கண்டிராத வளர்ச்சியை அடையும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'அப்பாவுக்கு நடந்த மாதிரி ஆகிவிடும்'.. தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி!

ABOUT THE AUTHOR

...view details