சண்டிகர்: 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (அக்.5) தொடங்கியது. இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 9.53 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 11 மணி நிலவரப்படி 22.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்து 632 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, கிராமப்புற பகுதிகளில் 13 ஆயிரத்து 500, நகர்ப் பகுதிகளில் 7 ஆயிரத்து 132, 114 இளைஞர்கள் வாக்குச்சாவடிகள், பெண்களால் நிர்வகிக்கப்படும் 115 வாக்குச்சாவடிகள், 87 மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குச்சாவடிகள் என அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு கோடியே 7 லட்சத்து 75 ஆயிரத்து 957 ஆண் வாக்காளர்கள், 95 லட்சத்து 77 ஆயிரத்து 926 பெண் வாக்காளர்கள் மற்றும் 467 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 650 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 5.24 லட்சம் முதல்முறை வாக்காளர்கள், 2.31 லட்சம் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 8 ஆயிரத்து 821 100 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
22.70% voter turnout recorded till 11 am in Haryana Assembly elections.
— ANI (@ANI) October 5, 2024
As of 11 am, Palwal recorded the highest voter turnout of 27.94%, followed by Jind at 27.20% and Mewat at 25.65%. Panchkula recorded the lowest voter turnout at 13.46% pic.twitter.com/dxGvrsg1DL
இதையும் படிங்க: ஸ்ரீநகரில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு என்ன காரணம்? மத்திய அரசை கைக்காட்டும் ஒமர் அப்துல்லா!
மேலும், மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 930 ஆண் வேட்பாளர்கள், 101 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் ஆயிரத்து 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அது மட்டுமல்லாமல், 40 சிஆர்பிஎஃப் (CRPF) கம்பெனிகள், 25 எல்லை பாதுகாப்பு படையினரின் (BSF) கம்பெனிகள், 45 சிஐஎஸ்எஃப் (CISF) கம்பெனிகள், 35 ஐடிபிபி (IDBP), 45 எஸ்எஸ்பி (SSB) மற்றும் 35 ஆர்பிஎஃப் (RPF) என மொத்தம் 225 கம்பெனி படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர 600க்கும் அதிகமான சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் இணைய வழி கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஹரியானா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது.