சென்னை: இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணி அளவில் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த சாகச விமானங்கள் காலை தாம்பரம் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் சாகசத்தை நிகழ்தவுள்ளன. இதில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 72 விமானங்கள் பங்கேற்க உள்ளன.
விமானப்படை சாகசமும் சென்னை மெரினாவும்: விமானப்படையின் விமான சாகசம் கடந்த 2003ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிலையில் 21 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற உள்ளது. பொதுவாக இந்த விமானப்படை சாகச நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி நடத்த சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது.
மூன்றாவது நாளாக ஒத்திகை: இந்நிலையில் அதற்கான மூன்று நாட்கள் ஒத்திகை நிகழ்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் சுக்கோய் சு 30, MI 17 VH ஹெலிகஃப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகஃப்டர் (ALH) ஹால் தேஜா, மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் ஆகியவை ஒத்திகை பயிற்சி எடுத்தனர்.
#IndianAirForceDay2024
— Indian Air Force (@IAF_MCC) October 5, 2024
Chennai, this is BIG!
Just ONE day left to go..........
Join to witness an epic & scintillating aerial display at Marina Beach at 11am
Let’s make history together—don’t miss it!#MarinaWorldRecord #1DayToGo#92ndAnniversary
@SpokespersonMoD… pic.twitter.com/MHGHTGbvHm
முக்கிய அறிவிப்பு: இந்த விமானப்படை சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணி - 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விமான சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு எந்த வழியாக வரவேண்டும், தங்கள் வரும் வாகனத்தை எங்கு நிறுத்த வேண்டும், வெயிலின் தாக்கத்தில் இருத்து தற்காத்து கொள்ளுவது போன்ற முக்கிய அறிவிப்புகள் விமானப்படை அதிகாரிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எந்த விமானத்தில் என்ன ஸ்பெஷல்? ஏர் ஷோவில் பங்கேற்கும் விமானங்களின் பட்டியல்
சாலை மாற்றம்: அதன்படி, "நிகழ்ச்சி நடைபெறும் நாளை மறுநாள் லைட்ஹவுஸ் முதல் உழைப்பாளர் சிலை வரை உள்ள காமராஜர் சாலை பொது மக்கள் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் வாகனங்களை ராணிமேரி கல்லூரி, லேடி விலிங்டன் வளாகம், மாநில கல்லூரி வளாகத்தில் நிறுத்த வேண்டும்.
மாடியில் இருந்து பார்க்கலாம்: பின் சாலையை கடந்து மெரினா கடற்கரைக்கு பொது மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து விமானப்படையின் சாகசத்தை பார்க்கலாம். மேலும் மெரினா கடற்கரைக்கு வந்து பார்க்க முடியாதவர்கள் திருவல்லிகேணி, கோவளம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் விமான சாகச நிகழ்வு அமைந்துள்ளது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்: வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விமான படை சார்பில் பொது மக்களுக்கு தொப்பி வழங்கப்பட உள்ளது. ஆனாலும் அவர்கள் முன்னெச்சரிக்கையாக குடைகள், தொப்பி மற்றும் தண்ணீர் பாட்டில், சன் கிளாஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கடும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விமான சாகசம் நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் விமான படை அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கலந்துக்கொள்ள உள்ளதால் மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
06.10.2024 அன்று மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள விமான சாகச் நிகழ்ச்சி 2024 காரணமாக, பின்வரும் போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளிக்க உள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் பொழுது விடிந்தால் காத்திருக்கிறது மாபெரும் வான் சாகசம்! இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, அக்டோபர் 06, காலை 11 மணிமுதல் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி! அனுமதி இலவசம்! அனைவரும் வாரீர்! @IAF_MCC @tracomiaf @sarang_iaf @Suryakiran_IAF pic.twitter.com/xe5vPdnMXO
— Defence PRO Chennai (@Def_PRO_Chennai) October 5, 2024
இதையும் படிங்க: 3வது நாள் விமான சாகச ஒத்திகை.. வானில் வட்டமிட்ட ரபேல், தேஜஸ்
போக்குவரத்து மாற்றங்கள்:
- காமராஜர் சாலை, காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்தலாம்.
- திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையை பயன்படுத்தலாம்.
- பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- அண்ணா சிலையிலிருந்து MTC பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி, RA புரம் 2வது பிரதான சாலை, TTK சாலை, RK சாலை, அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
வாகன நிறுத்தத்திற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்:
வ.எண் | சாலைகளின் பெயர் | வாகனங்கள் நிறுத்துமிடம் |
1 | காமராஜர் சாலை |
|
2 | சாந்தோம் சாலை |
|
3 | ஆர்.கே.சாலை |
|
4 | வாலாஜா சாலை |
|
6 | அண்ணாசாலை |
|
மேலே குறிப்பிடப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் காலை 09.30 மணிக்கு மூடப்படும். எனவே, நிகழ்ச்சியை பார்வையிட தனியார் வாகனத்தில் வரும் பார்வையாளர்கள் விரைவில் வருகை தருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
- ஏர் ஷோவை பார்வையிட வாகன ஓட்டிகள் அண்ணாசாலை, வாலாஜா சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.
- எதிர்பார்க்கப்படும் மக்கள் கூட்டம் மற்றும் வாகனங்களின் அடர்த்தி காரணமாக, நாளை (அக்.06) சென்னை முழுவதும் சிரமமில்லாமல் பயணிக்க. MTC பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் MRTS ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுள்ளனர்.
- MTC சிற்றூந்துகள் மூலம் அண்ணாசாலை மெட்ரோவில் இருந்து சிவானந்தா சாலையில் டிவி ஸ்டேசன் வரையிலும், வாலாஜா சாலையில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வரையிலும், ஆர்.கே சலையில் வி.எம் தெரு சந்திப்பு வரையிலும் மாநகர பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்