துபாய்: 9வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று(அக் 4) இந்தியா மகளிர் அணியும் - நியூசிலாந்து மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில், சுசி பேட்ஸ் - ஜார்ஜியா ப்ளிம்மர் ஜோடி களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரை பூஜா வஸ்தகர் வீசினார். முதல் பந்திலேயே பேட்ஸ் அதிரடியாக பவுண்டரி விளாசினார். முதல் ஓவரில் 2 பவுண்டரிகள் கிடைத்தன.
New Zealand have given India’s batters a big task in Dubai 💥
— ICC (@ICC) October 4, 2024
Follow the live match report here 📝⬇️#INDvNZ #T20WorldCup #WhateverItTakeshttps://t.co/Q3GzHa0Tqn
பவர் ப்ளே ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 55-0 என்ற கணக்கில் விளையாடியது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பேட்ஸ் அருந்ததி ரெட்டி வீசிய பந்து வீச்சில் அபாரமாக அவுட் ஆக, அமெலியா கெர் கைகோர்த்தார். இவரும் வந்த வேகத்தில் வெறும் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க அணி அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இந்நேரத்தில் தாப் சோஃபி டெவின் அதிரடியாக அரை சதம் விளாசி அணியைக் காப்பாற்றினார். இதற்கிடையில் ப்ரூக் ஹாலிடே 16 ரன்கள் மட்டுமே குவித்தார். மேலும், மேடி கிரீன் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆட்ட முடிவில் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகள் இழப்பில் நியூசிலாந்து அணி 160 ரன்களை குவித்தது. இதில், ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டுகளையும், அருந்ததி ரெட்டி மற்றும் ஆஷா சோபானா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதையும் படிங்க : 8 பவுலரை பயன்படுத்தியும் பிரயோஜனம் இல்லை! அசால்ட் வெற்றி கண்ட தென் ஆப்பிரிக்க மகளிர்!
161 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் இந்திய மகளிர் அணியினர் களமிறங்கினர். முதலில், ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா ஜோடி களமிறங்கியது. வந்த வேகத்திலேயே ஷஃபாலி வர்மா சொற்ப ரன்களில் அவுட் ஆனார். ஹர்மன்ப்ரீத் கவுர் களம் கண்டார். சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜெமிமா ரோட்ரிக்ஸ் களம் கண்டார். 10 ஓவர்கள் முடிவில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறிக் கொண்டிருந்தது.
களத்தில் தீப்தி ஷர்மா - ரிச்சா கோஷ் ஜோடி பொறுமையாக விளையாடியது. ஆனாலும், நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை இந்திய மகளிர் அணியால் சமாளிக்க முடியாமல் திணறியது. அடுத்து விளையாடிய பூஜா, ஸ்ரேயங்கா பட்டீல், ரேணுகா ஆகியோர் சொற்ப ரன்னில் அவுட் ஆனார். 19 ஓவரிலே இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது. இதில் ரோஸ்மேரி மெய்ர் 4 விக்கெட்டுகளையும், லியா தஹுஹு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்