சென்னை:சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக மகளிரணி சார்பில் நடைபெற்ற ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கினார். அப்போது பேசிய அவர், “இந்த வினாடி வினா போட்டியை நடத்தி “எங்கே திராவிடப் பட்டாளம்?” என்று கேட்பவர்களுக்கு “இதோ இங்கே!” என்று அடையாளம் காட்டியிருக்கிறார் துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி.
‘கலைஞர் 100’ மட்டுமல்ல; இந்தத் தமிழ்நாடும் - தமிழினமும் ‘கலைஞர் 1000’ கூட கொண்டாடும்! ஏன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் பல கோடி மக்களுக்கு ‘லைஃப்’ கொடுத்ததால்தான், கலைஞர் இன்னும் ‘லைவ்’-ஆக இருக்கிறார்.
இந்த போட்டியை நடத்த எடுத்த முயற்சி குறித்து கேட்டேன். அப்போது கனிமொழி கூறுகையில் கேள்விகளை உருவாக்க 15 பேர் கொண்ட குழுவை அமைத்து, அந்தக் குழு 250 புத்தகங்களை ஆய்வு செய்து, திராவிட இயக்கத்தின் வரலாறு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ஆகியோரின் வாழ்வு மற்றும் தொண்டு உள்பட பல திராவிடம் தொடர்பானவை குறித்து இந்த போட்டி நடத்தப்பட்டதாக கூறினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேயில் இருந்து, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கெடுத்துள்ளது விழாவின் சிறப்பு. அனைத்து வெற்றியாளர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நீங்கள் அனைவருமே இப்போது ஒரு 'திடாவிட என்சைக்ளோபீடியாக்கள்' (Dravidian Encyclopedia).
இதையும் படிங்க:காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு செவிலியர் காலணி எடுத்து போட்ட விவகாரம்!