தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தை கண் முன்னே மனைவி கொடூரக் கொலை.. சென்னை பகீர் சம்பவம்! - husband killed wife - HUSBAND KILLED WIFE

Husband Killed Wife: செங்கல்பட்டு அருகே உள்ள பொன்மார் பகுதியில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் குழந்தை கண் முன்னே, மனைவியை கொடூரமாக கொலை செய்த கிறிஸ்தவ துணை போதகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HUSBAND KILLED WIFE CHENGALPATTU CHENNAI
மனைவியை கொலை செய்த மத போதகர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 1:04 PM IST

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், பொன்மார் ஊராட்சியில் மலைதெருவில் விமல்ராஜ் (35) மற்றும் அவரது மனைவி வைஷாலி(33) ஆகிய இருவரும் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு கிறிஸ்தவ பாதிரியார் மைக்கேல் என்பவரின் மூலம் மும்பையில் உள்ள வைஷாலி குடும்பத்தாருடன் அறிமுக ஆகி அதே வருடத்தில் விமல்ராஜ் - வைஷாலி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் ஆகி நான்கு வருடம் ஆன நிலையில் இருவருக்கும் 11 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. விமல்ராஜ் பொன்மார், மலைத்தெருவில் உள்ள அடவெண்ட் கிறிஸ்தவ திருச்சபையில் துணை போதகராக ஊழியம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் ஏப்.28-ஆம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் மனைவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட உயிருக்குப் போராடுவதாக கூறி விமல்ராஜ் அவரது நண்பர் உதவியுடன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்க முயற்சி செய்துள்ளார்.

அங்கு வைஷாலியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து மனைவியின் உடலை விமல்ராஜ் தந்தையின் சொந்த ஊரான அருகில் உள்ள ஓட்டியம்பாக்கம் பகுதியில் இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக வைஷாலி இறந்து விட்ட செய்தியை மும்பையில் உள்ள அவர்களது குடும்பத்தார்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் வைஷாலியின் குடும்பத்தார் வரும் வரை உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏப்.29ஆம் தேதி மும்பையிலிருந்து வந்த வைஷாலியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரர் வைஷால்குமார் (35) ஆகியோர், "சம்பவம் நடைபெற்ற அன்று 2 மணியளவில் எங்களிடம் நன்றாக பேசினார் வைஷாலி அப்படி இருக்கையில் 4 மணி உடல் நலக்குறைவு ஏற்பட்டு எப்பட்டி இறக்க முடியும்? என கேள்வி எழுப்பி விமல்ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் வைஷாலியின் உடலை அவர்களது பெற்றோர் பார்த்த போது முகத்தில் காயம் ஏற்பட்டு இருப்பது போல் தெரிகிறது, எனவே வைஷாலி உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது சகோதரர் வைஷால்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தாழம்பூர் காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து வைஷாலி உடலை உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது விமல்ராஜை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மனைவி வைஷாலி மீது சந்தேகப்பட்டு கணவன் விமல்ராஜ்க்கு அடிக்கடி அவரிடம் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்.28 ஆம் தேதி கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த விமல்ராஜ் 11 மாத குழந்தை கண் முன்னே மனைவி வைஷாலியின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் உடல்நலக்குறைவால் உயிருக்கு போராடுகிறார் என மருத்துவமனைக்கு அழைத்து சென்று மனைவியின் உயிரை காப்பாற்றுவது போல் நாடகம் ஆடி ஊர் மக்களை நம்ப வைத்து போலீசார் விசாரணையில் அம்பலமானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:"கங்கை அமரன் அரைவேக்காடு"..வைரமுத்துவுக்கு ஆதரவாக களமிறங்கிய வன்னியரசு! - Vanni Arasu

ABOUT THE AUTHOR

...view details