தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

18 கோயில்கள்.. 25 புதிய திட்டப் பணிகள். அடிக்கல் நாட்டிய முதல்வர்! - TN CM MK STALIN

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.42.75 கோடி செலவிலான 27 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

திட்டப்பணிகளை திறந்து வைத்த முதல்வர்
திட்டப்பணிகளை திறந்து வைத்த முதல்வர் (Credits - Tn dipr x page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2024, 4:14 PM IST

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ 13) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.190 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் 4 அலுவலகக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.42 கோடியே 75 லட்சம் செலவில் 15 திருக்கோயில்களில் 25 முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் 2 அலுவலகக் கட்டடங்களை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் 4 அலுவலகக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்

ஊர் கோயில் மதிப்பீடு (கோடி) பணிகள்
மதுரை கள்ளழகர் திருக்கோயில் ரூ.49.25 பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணிகள் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணிகள்
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயில் ரூ.44.57 குபேரலிங்கம் அருகில் வணிக வளாகம் கட்டும் பணி
தண்டாரம் பட்டு வட்டம், வானாபுரம் பிள்ளையார் மாரியம்மன் திருக்கோயில் ரூ.5.63 புதிய திருமண மண்டபம் கட்டும் பணி
திருவண்ணாமலை நந்தவக் கட்டளை ரூ.1.07 புதிய வணிக வளாகம் கட்டும் பணி
திருச்சிராப்பள்ளி மாரியம்மன் திருக்கோயில் சமயபுரம் ரூ.25.62 புதிதாக திருக்கோயில் நுழைவு வாயில் அமைக்கும் பணி
நாகப்பட்டினம் ஔவையார் மற்றும் விஸ்வநாத சுவாமி திருக்கோயில், துளசியாபட்டினம் ரூ.18.95 ஔவையார் மணி மண்டபம் கட்டும் பணி

கோயம்புத்தூர்
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மருதமலை ரூ.6.90 பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணி
கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் திருக்கோயில் ரூ.2.29 புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் அமைக்கும் பணி
திருப்பூர் கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் ரூ.5.40 புதிய திருமண மண்டபம் கட்டும் பணி
திருவள்ளூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி ரூ.3.80 பக்தர்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி

உள்ளிட்ட பணிகள் என மொத்தம் ரூ.190.40 கோடி மதிப்பீட்டிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

15 திருக்கோயில்களில் 25 முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் 2 அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல்

ஊர் கோயில் மதிப்பீடு (கோடி) பணிகள்
கோயம்புத்தூர்

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

மருதமலை

ரூ.4.39

சீரமைக்கப்பட்ட திருக்கோயில்

மலைபாதை

நாகப்பட்டினம்

நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயில்

சிக்கல்

ரூ.1.07 புதிய வணிக வளாகம் திருச்சிராப்பள்ளி மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் ரூ.4.63 அமாவாசை மண்டபம் மற்றும் குங்குமம் தயாரிக்கும் கூடம் காஞ்சிபுரம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குன்றத்தூர் ரூ.2.95 புதிய திருமண மண்டபம் கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், தாந்தோன்றிமலை ரூ.2.09 முடி காணிக்கை மண்டபம் விழுப்புரம் அங்காளம்மன் திருக்கோயில், மேல் மலையனூர் ரூ.1.95 வணிக வளாகம் திருவள்ளூர் தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு ரூ.1.54 வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் கிருஷ்ணகிரி காளிகாம்பாள் காமாட்டீஸ்வரர் திருக்கோயில், ஓசூர் ரூ.76 லட்சம் மலர் வணிக வளாகம் ஈரோடு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை ரூ.61 லட்சம் புதிய வணிக வளாகம்

உள்ளிட்ட பணிகள் என மொத்தம் ரூ.42.75 கோடி செலவிலான 27 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ABOUT THE AUTHOR

...view details