தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் நகை செய்யும் பொற்கொல்லர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - CHIEF MINISTER M K STALIN

கோவையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்க நகைகள் செய்யும் பொற்கொல்லர்களை சந்தித்து அவர்களின் தொழில் குறித்து கேட்டறிந்தார்.

பொற்கொல்லரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொற்கொல்லரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 7:50 PM IST

கோவை:கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கொல்லர்களின் பட்டறைக்கு சென்று அவர்களின் தொழில் பற்றியும், அவர்களின் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

கோவை வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், கோவை மாவட்ட தங்க நகை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அனைத்து வசதிகளுடன் கூடிய தங்க நகை தொழில் பூங்கா அமைத்திட வேண்டும், பொற்கொள்ளர்கள் வாழ்வு உயர்ந்திட வழிவகை செய்ய வேண்டும்," என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பொற்கொல்லர்கள் அதிகம் இருக்கும் கெம்பட்டி காலனி பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் வருகை தந்தார். பொற்கொல்லரின் பட்டறைக்கு நேரடியாக சென்று அவர்களின் பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு தொழில் ரீதியாக உள்ள சிரமங்கள் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டார்.

கோவை கெம்பட்டி காலனியில் வசிக்கும் பொதுமக்கள் முதல்வருக்கு கை கொடுத்து வாழ்த்துகள் தெரிவித்தனர். அடுத்த முறையும் நீங்கள் தான் முதல்வர் எங்கள் வாக்கு உங்களுக்கு தான் என கூறி வாழ்த்துகள் தெரிவித்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details