சென்னை:சென்னையில் பருவ மழை பெய்யும் போதெல்லாம் வேளச்சேரியில் உள்ள டான்சி நகர், சீதாராம் நகர், ராம் நகர், விஜயநகர், வி.ஜி.பி, செல்வா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகும் சூழல் உள்ளது. இதன் காரணமாக மழை வெள்ளத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி ரப்பர் படகு மற்றும் லைப் ஜாக்கெட்களை தாங்களாகவே வாங்கியுள்ளனர்.
இது குறித்து டான்சி நகர் குடியிருப்பு நலச்சங்கம் செயலாளர் பாலகிருஷ்ணாவை ஈடிவி பாரத் செய்தியாளர் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசுகையில் அவர் கூறியதாவது, “மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்கின்றனர். அப்போது அரசு செய்யும் மீட்புப் பணிகள் சில நேரங்களில் அனைவருக்கும் சென்றடைவதில்லை.
அரசும் உதவிகளை அனைவருக்கும் செய்யமுடிவதில்லை. எனவே டான்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு மக்களாகிய நாங்களே எங்களை காப்பாற்றிக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மீட்புப் பணிக்கு ஏற்ற வகையில் படகுகள் வாங்கியுள்ளோம்.