சென்னை:கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கும் வகையில் அரசு விருப்புரிமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் எந்த ஆவணங்களும் இல்லாமல் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
இதையும் படிங்க:பார்முலா 1 கார் ரேஸில் சில விலங்குகள் வந்தது கூட தெரியாத அறிவாளிகள்..” - அதிமுக மாஜி அமைச்சருக்கு உதயநிதி பதிலடி!
இந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி சுயலாபம் அடைந்ததாகவும், அதற்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறி அமைச்சர் ஐ.பெரியசாமி, ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கம், அவரது மகன் துர்கா சங்கர், க.முருகையா, டி.உதயக்குமார் ஆகிய 7 பேருக்கு எதிராக 2013ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறை இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.